Friday, 15 July 2011

வசந்தத்தை எதிர்ப்பார்த்து....

வாழ்க்கையின் எல்லையா?
வாழவே இல்லையா?!
வசந்தமும் வந்திடாதோ - என்
வாழ்க்கையில் ! - இனி
வாழ்வதும் இறப்பதும்
விதி விட்ட வழியென
வேதனை ஒன்றையே
விழி காட்டுதோ !

வதைகளைத் தாங்கினேன்
வலைகளில் சிக்கினேன் !
விதைகளைப் போட்டிங்கு,
விரட்டுதே சதி என்னை !
விரயமாய் என் வாழ்க்கை
விரைந்தோடி விட்டதே !
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட - இனி
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட !

வாழ்க்கை என்னை மிரட்டினாலும்
வாசல் விட்டுத் துரத்தினாலும் !
வேதனைகள் மறைக்கிறேன் - என்றும்
வெறிகொண்டு உழைக்கிறேன்!
வெற்றி என்னும் பாதையில் - நான்
வெகுண்டெழுந்து நடக்கிறேன் !!



-- தமிழோடு வாழ்வோம்!
தமிழோடு உயர்வோம்! --

Wednesday, 22 June 2011

தொலைகின்ற நினைவுகள்

துடுப்பு இல்லா
ஓடம் போல்...
தூண்டுகொள் இல்லா
விளக்குப் போல்....
திசை இல்லா
பட்டம் போல்...
தேகம் இல்லா
உயிரைப் போல்....
தென்றல் வீசா
காலம் போல்....
தவிக்கிறேன் நான்!!
தனிமையில்.......
தொலைக்குயறேன்
என் நினைவுகளை!!!

Saturday, 18 June 2011

தமிழ்த்தேன்

உறவில் ஆயிரம் பேர் இருக்க...
என் உள்ளத்தில் இருப்பது நீ மட்டுமே !!! தமிழே !!!